திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் ஆலயத்தில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தரிசனம்!
காரைக்குடி, 09 மே (ஹி.ச.) காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண் ஈஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபய கஸ்த முத்தரையுடன் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஏரா
Karnataka Deputy CM


காரைக்குடி, 09 மே (ஹி.ச.)

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண் ஈஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபய கஸ்த முத்தரையுடன் அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நலன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானே தரிசனம் செய்து செல்கின்றனர்.

இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இவ்வாலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது இலட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் கூடி சனீஸ்வர பகவானே வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தரிசனத்திற்காக வந்திருந்தார்.

அவர் முன்னதாக சொர்ண கணபதி சுப்பிரமணியர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் அதனைத் தொடர்ந்து மரகத லிங்கத்தை தரிசனம் செய்த பின்னர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதிக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார்.

அவருடன் மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN