தமிழ்நாட்டில் உடனடியாக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெ.குரு மகள் விருதாம்பிகை வலியுறுத்தல்
சென்னை, 09 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஜெ.குரு மகள் விருதாம்பிகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், தமிழ்
Viru


Jj


சென்னை, 09 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஜெ.குரு மகள் விருதாம்பிகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் அல்லது திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் ஒன்றை காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் உடனடியாக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் நிலைமை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் சூழலில், விருதாம்பிகையின் இந்த அறிக்கையும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ