மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் அறிவிப்பு - மாலை 4 மணிக்கு வரச்சொல்லிய வி.சி.க
சென்னை, 09 மே (ஹி.ச.) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியாமல் தமிழக வெற்றி
திருமாவளவன்


சென்னை, 09 மே (ஹி.ச.)

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியாமல் தமிழக வெற்றி கழகம் திண்டாடி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தயவால் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்திருக்கிறது.

இருந்த போதிலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களை எட்ட முடியாததால் விஜய் முதலமைச்சராவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தொடர்பான தமது நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருந்தார்.

அதன்படி காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியாவதாக செய்தியாளர்கள் திரண்டு இருந்த நிலையில் மதியம் ஒரு மணிக்கு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வருவதாக தகவல் பரவியதால் விசிக அலுலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் ஏராளமான தமிழக வெற்றி கழகத்தினரும் அங்கு குவியத் தொடங்கினர்.

இதனிடையே ஆதரவு நிலைப்பாட்டை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியதால் தமிழக வெற்றி கழகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P