பதவிகள் கேட்பதால் தவெகவுக்கு ஆதரவு தருவதில் தாமதம் என்ற செய்திக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் மறுப்பு
சென்னை, 09 மே (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியாமல் தமிழக வெற்றி கழகம் திண்டாடி வர
விசிக


சென்னை, 09 மே (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க முடியாமல் தமிழக வெற்றி கழகம் திண்டாடி வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவது தொடர்பான தமது நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருந்தார்.

அதன்படி காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியாவதாக செய்தியாளர்கள் திரண்டு இருந்த நிலையில் மதியம் ஒரு மணிக்கு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர் ஆதரவு நிலைப்பாட்டை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியதால் தமிழக வெற்றி கழகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அமைச்சர் பதவி மற்றும் துணை முதலமைச்சர் பதவியை கேட்டு தமிழக வெற்றி கழகத்திடம் பேரம் பேசி வருவதால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தீயாய் பரவின.

அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை.

ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன் போக வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P