ரூ.6.34 கோடி செலவில் புதிய சாலை அகலப்படுத்தும் பணிகள் - நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல், 09 மே (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வாகன போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ.6 கோடி 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Inspection


திண்டுக்கல், 09 மே (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வாகன போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ.6 கோடி 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் பிறகு வத்தலக்குண்டு நகர் முதல் திண்டுத்தல் - தேனி தேசிய நெடுஞ்சாலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய சாலை அகலப்படுத்தப்பட்டு விரிவாக்கம், கட்டுமான பணிகள் நடைபெற்றது தற்போது புதிய சாலையில் அகலப்படுத்தும் பணிகள், கட்டுமானம் பணிகள் நிறைவடைந்தது.

இப்பணிகளை தரம், கட்டுமானம் குறித்து மதுரை நெடுஞ்சாலைதுறை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சங்கர சுப்பிரமணியம், உதவி கோட்ட பொறியாளர் சுப்பையா, வத்தலக்குண்டு உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி , தரக்கட்டுபாடு உதவி கோட்ட பொறியாளர் சொக்கலிங்கம் ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் உதவி பொறியாளர்கள் தாமரை மாறன் அருண் பிரபு சதீஸ்குமார் உட்பட ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN