அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் – ராஜ் சத்யன் வலியுறுத்தல்
சென்னை, 01 ஜூன் (ஹி.ச.) அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாமல், வருங்கால இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழ
Raj


Jj


சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாமல், வருங்கால இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், சமூக வலைதளங்களில் தீவிரமாக கழகப் பணியாற்றி வந்த கே.எஸ். பூக்கடை மகேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராக நடைபெற்ற சில செயல்களால் கடந்த சில நாட்களாகவே மகேந்திரன் மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும் என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம்.

இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

“கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி. அவர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம்” என்றும் ராஜ் சத்யன் வேதனை தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்.

வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என்று வலியுறுத்திய அவர், மறைந்த கே.எஸ். பூக்கடை மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ