நந்தியாலாவில் ஒய்.எஸ்.ஆர் சிலை சேதம் - ஷர்மிளா கடும் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்
நந்தியாலா, 01 ஜூன் (ஹி.ச.) நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாச சென்டரில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அவர்களின் சிலை ஒருவரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.
A


நந்தியாலா, 01 ஜூன் (ஹி.ச.)

நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாச சென்டரில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அவர்களின் சிலை ஒருவரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா கடும் கண்டனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதாவது அவர் கூறுவது :

சிலை உடைக்கப்பட்ட போது அங்கு போலீசார் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

குற்றவாளி “மனநிலை சரியில்லை” என கூறி போலீசார் நடவடிக்கையை தள்ளிப்போடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்தார்.

இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும், இதில் முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

சிலை உடைக்கப்பட்ட இடத்தில் உடனடியாக புதிய சிலை அமைக்க வேண்டும்.

இல்லையெனில் அதே இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என ஒய்.எஸ். ஷர்மிளா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA