கல்லூரி மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை - டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை, 01 ஜூன் (ஹி.ச.) சென்னை பல்லாவரம் பகுதியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும், போதை கலந்த சாக்லேட் வழங்கியும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பகீர் புகார் எழுந்துள்ள
கல்லூரி மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை - டிஜிபி அலுவலகத்தில் புகார்


சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)

சென்னை பல்லாவரம் பகுதியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும், போதை கலந்த சாக்லேட் வழங்கியும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பகீர் புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தனக்கு தெரிந்த நபர்களால் திட்டமிட்டு போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டு, சுயநினைவிழந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மயக்க நிலையில் இருந்த தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இந்த கொடூரச் செயலில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவிக்கு எதிராக நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b