Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 ஜூன் (ஹி.ச.)
புதிய அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜயை வரவேற்ற எம்.பி.துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து உடனடியாக கருத்து கூற முடியாது என்றும், அரசுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குற்றச்சம்பவங்கள் தொடர்பாக பேசிய அவர்,
குற்றவாளிகளை கைது செய்வதிலும், சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் காலதாமதம் இல்லை. எந்த அரசாலும் குற்றச்சம்பவங்களை முழுமையாக தடுக்க முடியாது” என்றார்.
விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து கருத்து தெரிவித்த துரை வைகோ, அரசின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு தற்போதைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றார்.
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியான பின்னர், ஏன் முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கும் எனவும் கூறினார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் 100 சதவீதம் நிறைவேற்ற முடியுமா என்பது தெரியவில்லை.
கடந்த அரசும் மகளிர் உரிமைத்தொகை வழங்க கால அவகாசம் எடுத்துக்கொண்டது.
தற்போதைய நிதி நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது சவாலாக இருக்கலாம் என்றார்.
கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசிய அவர்,
துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம்.
அதனால் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்கும் சூழல் தற்போது இல்லை.
மதிமுக தனி இயக்கம், கூட்டணி ஆதரவு தொடர்பான இறுதி முடிவு கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றார்.
அதிமுகவில் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
அதிமுக தலைமையின் செயல்பாடுகளுடன் முரண்பட்டு சிலர் கட்சியை விட்டு விலகுவது அவர்களது தனிப்பட்ட முடிவு அது, சட்டவிரோதம் அல்ல, என துரை வைகோ தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam