பொறியியல் கலந்தாய்வு விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு - இதுவரை 2.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை, 01 ஜூன் (ஹி.ச) தமிழ்நாட்டில் 2026-2027 கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நாளையுடன்(ஜூன் 02) கால அவகாசம் முடிவடைகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மே மாதம்
பொறியியல் கலந்தாய்வு விண்ணப்ப பதிவு  நாளையுடன் நிறைவு -  இதுவரை 2.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


சென்னை, 01 ஜூன் (ஹி.ச)

தமிழ்நாட்டில் 2026-2027 கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நாளையுடன்(ஜூன் 02) கால அவகாசம் முடிவடைகிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கிய கலந்தாய்வில் இதுவரை 2 லட்சத்து 81 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் நாளை நள்ளிரவு 11.59 மணிக்குள் tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெளிவுபடுத்தியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆவணங்களை சமர்ப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 8 முதல் 20 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, ஜூன் 29 ஆ தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது.

பொறியியல் படிப்புகளுக்கு தேவையான அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் நிகழாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிகழாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b