Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை, இன்று அல்லது நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் பாஜக தேசிய தலைமையின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ளார் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது இந்த திடீர் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பாஜக மேலிடத்திடம் நேரடியாக தெரிவிப்பதற்காகவே அண்ணாமலை டெல்லி செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலையின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், டெல்லி பயணத்தின் போது நடைபெறும் சந்திப்புகள் அவரது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b