Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவே தான் இருக்கிறது. கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.5000க்கும் மேல் உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன் தினம் ( மே 30 ) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,630க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து மாத தொடக்கமான இன்று ( ஜூன் 1) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P