குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் முருங்கை சாகுபடி செய்வது எப்படி?
தமிழ்நாடு, 01 ஜூன் (ஹி.ச.) முருங்கை சாகுபடியை மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் பூமியில் ஜூன் - ஜூலை அல்லது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் செய்வது அதிக மகசூலைத் தரும். முருங்கை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு சிறந்த லாபகரமான பயிராகும். மண்
க


தமிழ்நாடு, 01 ஜூன் (ஹி.ச.)

முருங்கை சாகுபடியை மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் பூமியில் ஜூன் - ஜூலை அல்லது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் செய்வது அதிக மகசூலைத் தரும்.

முருங்கை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு சிறந்த லாபகரமான பயிராகும்.

மண் வகை:

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் கரிசல் மண் மிகவும் ஏற்றது.

தேங்கும் தண்ணீர் வேர் அழுகலை ஏற்படுத்தும்.

உழவு செய்தல்:

தேர்வு செய்த நிலத்தை நன்றாக 2-3 முறை உழவு செய்ய வேண்டும்.

குழிகள் அமைத்தல்:

1 முதல் 1.5 அடி ஆழ மற்றும் அகலமுள்ள குழிகளை எடுக்க வேண்டும்.

இடைவெளி:

செடிமுருங்கைக்கு வரிசைக்கு வரிசை 2.5 மீட்டரும், செடிக்கு செடி 2 மீட்டரும் இடைவெளி விடலாம்.

அடர்பயிர்ப் பெருக்க முறையில் 1.2 x 1.2 மீட்டர் இடைவெளியும் பயன்படுத்தப்படுகிறது.

அடி உரம்:

ஒவ்வொரு குழியிலும் 3 கைப்பிடி தொழுவுரம், 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு மற்றும் மண்புழு உரம் இட்டு மண்ணுடன் கலந்து நிரப்ப வேண்டும்.

விதை அளவு:

ஒரு ஏக்கருக்கு சுமார் 200 - 300 கிராம் விதைகள் தேவைப்படும். விதைகளை நடும் முன் பூஞ்சாணக் கொல்லி அல்லது வேப்ப எண்ணெயில் நேர்த்தி செய்வது நல்லது.

நீர் பாய்ச்சுதல்:

விதைத்தவுடன் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பின்னர் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது தண்ணீரைச் சேமிக்க உதவும்.

நுனி கிள்ளுதல்:

செடி 3 அடி ,சுமார் 80 நாட்கள். வளர்ந்தவுடன் அதன் நுனியைக் கிள்ள வேண்டும். இதனால் பக்கக் கிளைகள் அதிகமாக வளர்ந்து, காய் பிடிப்பு அதிகரிக்கும்.

ஊடுபயிர்:

முருங்கை வளரும் ஆரம்பக் காலத்தில் நிலக்கடலை, உளுந்து அல்லது மக்காச்சோளம் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

முக்கியப் பூச்சிகள்:

கம்பளிப்பூச்சி மற்றும் ஈக்கள் முருங்கையை அதிகம் தாக்கும்.

கட்டுப்பாடு:

இயற்கை முறையில் வேப்பங்கொட்டைக்கரைசல் (5%) அல்லது பஞ்சகவ்யா தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல் விதைத்த 6 முதல் 7 மாதங்களில் முருங்கை அறுவடைக்குத் தயாராகி விடும்.

ஒரு மரத்திலிருந்து வருடத்திற்கு சுமார் 200 முதல் 250 காய்கள் வரை மகசூல் பெற முடியும்.

Hindusthan Samachar / Durai.J