கோயம்பேடு இளம் பெண் கொலை வழக்கு - 8 பேர் மீது FIR பதிவு 7  பேர் கைது
சென்னை, 01 ஜூன் (ஹி.ச) சென்னை கோயம்பேட்டில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் அடையாளம் காட்டக்கூடிய 8 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது தெரியவந்து
Jn


Nn


சென்னை, 01 ஜூன் (ஹி.ச)

சென்னை கோயம்பேட்டில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் அடையாளம் காட்டக்கூடிய 8 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

வெளியாகியுள்ள FIR-ன்படி, இந்திய நீதிச் சட்டம் (BNS) பிரிவு 115(2), 351(3), 103 மற்றும் 109(1) ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரிவு 115(2)-ன் கீழ் கொடுங்காயம் ஏற்படுத்துதல், பிரிவு 351(3)-ன் கீழ் தீவிர குற்ற மிரட்டல், பிரிவு 103-ன் கீழ் கொலை மற்றும் பிரிவு 109(1)-ன் கீழ் கொலை முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றொரு நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை, முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ