Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச)
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழக வெற்றிக்காக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அண்மையில் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெள்ளை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் உள்ள கடன் நிலவரம், தமிழ்நாட்டின் தற்போதைய நிதிப் பற்றாக்குறை, திமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களின் மொத்த அளவு உள்ளிட்ட விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த முழுமையான தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ