Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 01 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்குட்பட்ட அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்டவற்றுக்கு செல்ல வனத்துறை சார்பாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் வனச்சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் சேவை மேம்பாட்டை கருத்தில் கொண்டு இன்று (01.06.2026) முதல் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு வன சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகள் UPI/ QR CODE போன்றவற்றின் வழியாக ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் இன்று முதல் பணமாக கட்டணம் செலுத்தும் முறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN