சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் - மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
புதுடெல்லி , 01 ஜூன் (ஹி.ச.) சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணிய மோகனா, மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், பஞ்ச
N


புதுடெல்லி , 01 ஜூன் (ஹி.ச.)

சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணிய மோகனா, மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, மத்திய பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டு நீதிபதி அருண் பல்லி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த புதிய நியமனங்களின் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 38 நீதிபதி பணியிடங்களில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்து, வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA