Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 01 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் போலீஸ் பட்டாலியன்
பின்புறத்தில் அமைந்துள்ளது பாண்டியன் நகர்.
இந்த பகுதியில் முட்புதரில்
ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை
அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி நகர போலீசார் 40 வயது மதிக்கத்தக்க
பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
உடனடியாக சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடலை
அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பிரதீப், பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட போலிசார் சம்பவ
இடத்தில் தடயங்களை சேகரித்து இறந்த பெண் யார்? எப்படி இங்கே வந்தார்? கொலை செய்தது யார் ? குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனியில் மையப்
பகுதியில் பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam