Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 ஜூன் (ஹி.ச.)
கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, இன்று
(ஜூன் 1-ம் தேதி) கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
பேனா-தாள் முறையிலான தேர்வுகள் மற்றும் கணினி வழித் தேர்வுகள் (CBT) ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், நீட்-யுஜி 2026 மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) தொடர்பான விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.
பாராளுமன்ற வளாக விரிவாக்கக் கட்டடத்தில் உள்ள குழு அறையில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும், நாளை
(ஜூன் 2-ம் தேதி) காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் குழு, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் திரையில் மதிப்பெண் பதிவு
(On-Screen Marking - OSM) முறையை அமல்படுத்துவது மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆய்வு செய்யும்.
9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற உள்ளன. தேர்வு நடைமுறைகள் தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில் இந்த ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, லாத்தூரைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் புனேவைச் சேர்ந்த பயிற்சி நிறுவன ஆசிரியர் உள்ளிட்ட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b