மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்
புதுடெல்லி, 01 ஜூன் (ஹி.ச.) தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமாக நடைபெறும் தேர்தல் மூலமாகவும் 3
க


புதுடெல்லி, 01 ஜூன் (ஹி.ச.)

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.

இதில் 24 இடங்கள் வழக்கமாக நடைபெறும் தேர்தல் மூலமாகவும் 3 இடங்கள் இடைத்தேர்தல் வாயிலாகவும் நிரப்பப்பட உள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் ஆகியோர் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ளனர்.

இவர்கள் உள்பட 24 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற

21-ந் தேதியில் இருந்து ஜூலை மாதம் 19-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு நாட்களில் முடிவடைகிறது.

இந்த 24 பதவியிடங்களும் கர்நாடகம், ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், மணிப்பூர், மேகாலயா, அருணாசலபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 10 மாநி லங்களில் காலியாகிறது.

இதில் ஆந்திரா, குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்களும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களும், ஜார்கண்டில் 2 இடங்களும், மணிப்பூர், மேகாலயா, அருணாசலபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா 1 இடமும் காலியாகிறது.

இதனை முன்னிட்டு இந்த இடங்களை நிரப்புவதற்காக இந் திய தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 22-ந் தேதி தேர்தல் தேதியை அறிவித்தது.

அதன்படி வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P