Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை ராமாபுரத்தில் விபத்து ஏற்பட்ட தொழிலாளிகள் குடியிருப்பு இருக்கும் இடம் மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியோ, அந்த தொழிலாளர்கள் மெட்ரோ கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களோ அல்ல என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ராமாபுரத்தில் தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், வடமாநில தொழிலாளர்கள் சிலர் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது, இரும்பு ஷெட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இதில், 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் பலியாகி உள்ளார்.
அவர் ஜார்கண்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்கள் மெட்ரோ தொழிலாளிகள் என்றும் அந்த இடம் மெட்ரோ பணிகளுக்கான இடம் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன.
அதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம்
அளித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN