Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் – சேலையூர் பிரதான சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடம்பாக்கம் பகுதியில் இருந்து அசோக் மற்றும் சந்திப் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சேலையூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்திசையில் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஓட்டி வந்த வெள்ளை நிற கார், இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில், மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P