கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த ஆந்திர மாநிலத்தவர் குண்டர் சட்டத்தில் கைது
ராணிப்பேட்டை, 01 ஜூன் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து சமூகத்தை சீர்குலைத்து வந்த ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் (40) சோளிங்கர்
குண்டாஸ்


ராணிப்பேட்டை, 01 ஜூன் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து சமூகத்தை சீர்குலைத்து வந்த ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் (40) சோளிங்கர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் ஜானகிராமனை ஓராண்டு கால குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபர் மீது குண்டு தடுப்பு சட்டம் போடப்பட்டு இருப்பது அப்பகுதி பெண்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN