ஆறு மாதம் கூட அமைதியாக இருக்க முடியவில்லை - முதல்வர் விஜய் பேச்சு
திருச்சி, 01 ஜூன் (ஹி.ச.) திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவரை,அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜ
விஜய்


திருச்சி, 01 ஜூன் (ஹி.ச.)

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவரை,அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்றார்.

அங்கு வாக்காளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய்,

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் மக்களுக்காக உழைக்க வந்துள்ளேன்.

இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்றவர்கள், 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியாமல் திருமண நிகழ்ச்சிகளில் கூட புலம்பி வருகிறார்கள், என திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.

ஏன் நாங்கள் கோட், சூட் போடக்கூடாதா? அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் கோட், சூட் அணிய வேண்டுமா? நம் மனதைப் போல கருப்பு, வெள்ளை நிறத்தில்தான் அணிகிறேன் என்றும் அவர் கூறினார்.

மேலும், நான் குதிரை பேரம் நடத்தினேனா? தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் இணைந்து ஆட்சியை அமைக்க திட்டமிட்டன.

அதிமுக, திமுக இணைந்து நம்மை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க முயன்றன.

ஆனால் இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்பதற்காக மக்கள் எங்களை தேர்வு செய்துள்ளனர் என்றார்.

இன்றும் இரண்டு சக்திகளுக்கிடையே தான் போட்டி நடைபெறுகிறது.

ஒன்று தூய சக்தியான தவெக, மற்றொன்று தீய சக்தியான திமுக என தெரிவித்த முதலமைச்சர் விஜய்,

‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam