Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அமைச்சர்கள், அலுவலகங்கள் உள்ளன.
சென்னை தலைமைச்செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை 10 தள கட்டிடத்தில், 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த அலுவலகங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.45 மணிவரை பணிநேரம். உணவு இடைவேளை அரை மணி நேரமாக உள்ளது.
இந்நிலையில், மனிதவள மேலாண்மைத்துறையில் , வருகைப்பதிவுக்காக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டு அறியும் தொடுதிரை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று தேதி முதல் பயோமெட்ரிக் (Biometric) அல்லது முக அங்கீகார (Face ID) அடிப்படையிலான வருகைப்பதிவைக் கட்டாயமாக்கியுள்ளது.
அந்த துறையின் அலுவலர்கள் வருகை இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் விரைவில் இதே முறை வருகைப்பதிவேடு திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது,
இந்நிலையில் தற்போது மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறைக்கு வந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA