Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 01 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திருத்தணி – பொதட்டூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.த
கவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அதிகாரிகளின் சமரச முயற்சியை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சிலரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam