பாதுகாப்புக்கு முன்னுரிமை - உத்தரப்பிரதேச டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா உறுதி
உத்தரபிரதேசம், 01 ஜூன் (ஹி.ச.) 2025 மே மாதம் உத்தரப்பிரதேசத்தின் பொறுப்பு டிஜிபியாக ராஜீவ் கிருஷ்ணா நியமிக்கப்பட்டார். 2025 மே 31-ம் தேதி ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி பிரசாந்த் குமாருக்குப் பிறகு அவர் பொறுப்பேற்றார். இன்று செய்தியாளர்களுக்கு
பாதுகாப்புக்கு முன்னுரிமை - உத்தரப்பிரதேச டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா உறுதி


உத்தரபிரதேசம், 01 ஜூன் (ஹி.ச.)

2025 மே மாதம் உத்தரப்பிரதேசத்தின் பொறுப்பு டிஜிபியாக ராஜீவ் கிருஷ்ணா நியமிக்கப்பட்டார்.

2025 மே 31-ம் தேதி ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி பிரசாந்த் குமாருக்குப் பிறகு அவர் பொறுப்பேற்றார்.

இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டிஜிபி கிருஷ்ணா கூறுகையில்,

முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு சகிப்புத்தன்மை இல்லாத அணுகுமுறை, பெண்களின் பாதுகாப்பு, வணிகர்களின் பாதுகாப்பு, குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றவாளிகள் மீதான கடும் நடவடிக்கை உள்ளிட்ட அரசின் முன்னுரிமைகளை நிறைவேற்ற உத்தரப்பிரதேச காவல்துறை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய காவல்துறை முயற்சிக்கிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. சில குற்றவாளிகள் மிகவும் ஆபத்தானவர்கள். காவல்துறை கைது செய்யச் செல்லும்போது அவர்கள் தப்பிக்க முயல்கிறார்கள், காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் அல்லது கொடூரமான தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள்.

அப்போது காவல்துறையும் பதிலடி கொடுக்கிறது. இதில் சில குற்றவாளிகள் காயமடைகின்றனர், நமது காவலர்களும் காயமடைகின்றனர். சில குற்றவாளிகள் உயிரிழக்கின்றனர், சில நேரங்களில் காவலர்களும் உயிரிழக்கின்றனர். அடிப்படையில், உத்தரப்பிரதேச காவல்துறை குற்றவாளிகள் எந்த மொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் பதிலளிக்கிறது. அதற்கான துணிவு காவல்துறைக்கு உள்ளது.

உத்தரப்பிரதேச காவல்துறை அனைத்து தேர்தல்களையும் மிகவும் அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதில் பெயர் பெற்றது. இங்கு அனைத்து தேர்தல்களும் அமைதியாகவும் நியாயமாகவும் நடத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி இந்த நடைமுறை தொடரும். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b