ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து உயர்வு - வினாடிக்கு 4,000 கன அடியை எட்டியது
தர்மபுரி, 01 ஜூன் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 4,000 கன அடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரி
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து உயர்வு - வினாடிக்கு 4,000 கன அடியை எட்டியது


தர்மபுரி, 01 ஜூன் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக வினாடிக்கு 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 4,000 கன அடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து உயர்வால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி மற்றும் சினிஃபால்ஸ் பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பை அடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் எனது பார்க்கப்படுகிறது. நீர்வரத்து நிலவரங்கள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்கவும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b