Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 01 ஜூன் (ஹி.ச.)
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த மே 9ஆம் தேதி சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அவருடன் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால், அஷோக் கீர்த்தனியா, நிசித் பிரமாணிக், சுதிராம் துது உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றிருந்தனர்.
இந்நிலையில், அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
தீபக் பர்மன், அர்ஜுன் சிங், ஷங்கர் கோஷ், கவுரி சங்கர் கோஷ், தபஸ் ராய், மனோஜ் குமார் ஓரன், ஜகந்நாத் சட்டோபாத்யாய, அஜோய் போத்தார், ஸ்வபன் தாஸ் குப்தா, ஷரத்வாத் முகர்ஜி, கல்யாண் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கொல்கத்தா மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P