Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச)
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்த ஆளுநரின் செயலைக் கடுமையாகக் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் ஜூன் 7-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி பங்கேற்க உள்ளனர்.
தமிழினத்தின் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் மதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை காவிமயமாக்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது என அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஆளுநரின் தொடர் செயல்பாடுகள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு மதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b