தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 முக்கிய குற்றவாளிகள் கைது
திருநெல்வேலி, 10 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் மற்றும் வாகைக்குளம் பகுதிகளில் கடந்த மே 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ
கைது


திருநெல்வேலி, 10 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் மற்றும் வாகைக்குளம் பகுதிகளில் கடந்த மே 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மறுநாள் தென்காசி மாவட்டம் நெட்டூர் பகுதி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அதே கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம் மற்றும் மானூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்குகளில் தொடர்புடைய 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான 6 பேரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சண்முகக்குட்டி என்ற சண்முகசுந்தரம் என்ற மதன் (26), நந்து (24), இசக்கிராஜா என்ற ராஜா (25), வேல்கார்த்திக் (23), பேச்சிமுத்து (37) மற்றும் சண்முகநாதன் என்ற ராஜா (30) ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இவர்களுடன் தொடர்புடைய பிற குற்றச் சம்பவங்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam