Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 10 ஜூன் (ஹி.ச.)
பிரபல தெலுங்கு நடிகரும், பசவதாரகம் இந்தோ-அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான நந்தமுரி பாலகிருஷ்ணா, இன்று (ஜூன் 10) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளையொட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதையும், ஏழை எளிய மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதுபோல,இன்று தனது பிறந்தநாளையொட்டி, ஹைதராபாத்தில் உள்ள பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது,
கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை,
லாப நோக்கமின்றி புற்றுநோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை வழங்கி வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சையை பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதை அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், மருத்துவமனை சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்களையும் அவர் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
25 ஆண்டுகால சேவையை முன்னிட்டு, ஹைதராபாத்தில் புதிய ‘நார்த் பிளாக்’ கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதி அருகே துள்ளூரில் புதிய புற்றுநோய் மருத்துவமனை கட்டப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு பல்வேறு தரப்பினர் நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.
மேலும்,அமராவதியில் கட்டப்பட உள்ள புதிய மருத்துவமனைக்காக ரூ.10 லட்சம் நன்கொடையும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
நன்கொடையாளர்களுக்கு பாலகிருஷ்ணா நன்றி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA