இயக்குநர் பாரதிராஜா மறைவு - மண்ணில் கவிதை கண்டவர் என நடிகர் மோகன்லால் உருக்கமான இரங்கல்
திருவனந்தபுரம், 10 ஜூன் (ஹி.ச.) தமிழ் திரையுலகின் பிதாமகன்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இன்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் மோகன்லால் கூறி
Actor Mohanlal pays a heartfelt tribute


திருவனந்தபுரம், 10 ஜூன் (ஹி.ச.)

தமிழ் திரையுலகின் பிதாமகன்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இன்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் மோகன்லால் கூறியிருப்பதாவது,

மண்ணில் கவிதையைக் கண்டவர், மௌனத்தில் உண்மையை உணர்ந்தவர், ஒவ்வொரு காட்சியிலும் ஆன்மாவைத் தேடிக் கண்டறிந்தவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை கிராமத்து மண் வாசனையால் உலகறியச் செய்த அந்த மகா கலைஞனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவருடன் ஒரே திரையைப் பகிர்ந்து நடித்தது என் கலையுலக வாழ்வில் என்றென்றும் நான் போற்றும் பெருமை.

சக கலைஞனாக அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். அவரது கண்டிப்பிலும் கனிவு இருக்கும், வசனம் இல்லாத பார்வையிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்

என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகள் கடந்து திரையுலகமே பாரதிராஜாவின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மோகன்லாலின் இந்த இரங்கல் குறிப்பு கலையுலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / vidya.b