Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா , 10 ஜூன் (ஹி.ச.)
இந்திய திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண் தனது சமூக வலைதள பதிவில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
பாரதிராஜாவின் மறைவு இந்திய திரைப்படத் துறைக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தமிழ் திரைப்பட உலகைத் தாண்டி தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களிலும் தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் பாரதிராஜா என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது சகோதரர் சிரஞ்சீவி நடித்த ‘ஆராதனா’ திரைப்படம் மற்றும் தேசிய விருது பெற்ற ‘சீதாக்கோக சிலுகா’ போன்ற படைப்புகள் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். கிராமிய வாழ்க்கை மற்றும் மனித உறவுகளின் நுணுக்கமான உணர்வுகளை திரையில் அழகாக பதிவு செய்தவர் பாரதிராஜா.
தேசிய அளவில் பல விருதுகளை வென்று இந்திய சினிமாவில் அழியாத முத்திரையை பதித்த பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA