Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம், 10 ஜூன் (ஹி.ச.)
விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்டில் ஏற்பட்ட கடுமையான விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர் பைடிராஜு இன்று காலை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், 24 மணி நேரத்திற்குள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அமைச்சர் நாரா லோகேஷ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கினார்.
அதேபோல், மாநில அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர ஊழியர்களின் குடும்பங்களுக்கு மொத்தமாக சுமார் ரூ.1.72 கோடி வரை நன்மைகள் வழங்கப்படும் என்றும், ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.45 லட்சம் வரை உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து காரணங்களை கண்டறிய மத்திய எஃகு துறை சார்பில் மூன்று உறுப்பினர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, இந்த விபத்தால் ஸ்டீல் பிளாண்டுக்கு ஆரம்ப கட்டமாக சுமார் ரூ.120 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில யூனிட்களில் மீண்டும் உற்பத்தியை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA