பாரதிராஜா மறைவுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா மறைவுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், தமிழ் மண்ணின் மண்வாசனையையும், மக்களின் வாழ்வியலையும்
தங்கம் தென்னரசு


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா மறைவுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

தமிழ் மண்ணின் மண்வாசனையையும், மக்களின் வாழ்வியலையும் திரையில் உயிர்ப்பித்துக் காட்டிய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது. கிராமங்களின் உணர்வுகளையும், மனித உறவுகளின் ஆழத்தையும் தனது படைப்புகளின் மூலம் தலைமுறைகள் கடந்தும் பேச வைத்தவர்.

அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam