Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில்,
பாரதிராஜா மறைவு செய்தி அறிந்து மிகுந்த துயரமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கித் திருப்பியவர் பாரதிராஜா என்றும், திரைத்துறையை மண் வாசனையால் நிரப்பியதுடன், தமிழ் மண்ணின் விழுமியங்களை உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரதிராஜாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பாரதிராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், மறைந்த பாரதிராஜாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P