Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 ஜூன் (ஹி.ச.)
டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் ஏப்ரல் 6, 2026 அன்று, பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு அடையாளம் தெரியாத கார் ஒன்று வலுக்கட்டாயமாக நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முகமூடி அணிந்த நபர் ஓட்டிவந்த கார், 2-வது வாயில் வழியாக உள்ளே நுழைந்து, சபாநாயகர் அலுவலகத்திற்கு அருகே மலர்க்கொத்தை வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் புதுடெல்லி சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை 311 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று உறுதி செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி சபாநாயகரின் வாகனம் வரை சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உயர் பாதுகாப்பு வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.
குற்றப்பத்திரிகை கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அதன் விவரங்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சிசிடிவி காட்சிகளின் ஆய்வு, பாதுகாப்புப் படை நிலைநிறுத்தம் குறித்த தகவல்கள் மற்றும் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட பிற ஆதாரங்கள் அடங்கும்.
இந்த சம்பவத்தை அடுத்து குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை பாதுகாப்பு மீறல் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டது.
Hindusthan Samachar / vidya.b