இயக்குனர் பாரதிராஜா மறைவு - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாரதிராஜா(84), உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பாரதிராஜாவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பின
இயக்குனர் பாரதிராஜா மறைவு - செல்வப்பெருந்தகை இரங்கல்


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாரதிராஜா(84), உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

பாரதிராஜாவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் உலக திரையில் பதித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

கிராமிய வாழ்க்கையை கலையாக மாற்றி, தமிழ் சினிமாவிற்கு புதிய மொழியையும் முகவரியையும் தந்த மகத்தான படைப்பாளி அவர். அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய கலை மரபும் தலைமுறைகள் கடந்தும் வாழும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b