மின்வாரிய தலைமை அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு - சி பி சி ஐ டி விசாரணை தொடக்கம்
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டுப்போன சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, எஸ
ஹார்ட் டிஸ்க்


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டுப்போன சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்.பி. சாஜிதா மேற்பார்வையில் மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கோபிநாத் மற்றும் திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளை வாங்கியதாகக் கூறப்படும் பெங்களூரைச் சேர்ந்த கடை உரிமையாளர் முரளி மனோகர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கில் கோபிநாத் மற்றும் முரளி மனோகரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

தற்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், திருட்டுப்போன ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்த தகவல்கள், திருட்டின் பின்னணி மற்றும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam