மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை - அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வு
தென்காசி, 10 ஜூன் (ஹி.ச) தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்109 மில்லி மீட்டர் மழைப் பொழிவானது பதிவாகியுள்ளது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்
Gundaru Dam


தென்காசி, 10 ஜூன் (ஹி.ச)

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்109 மில்லி மீட்டர் மழைப் பொழிவானது பதிவாகியுள்ளது.

குறிப்பாக, தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர்நிலைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணைப்பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை பொழிவும், அடவிநயினார் கோவில் நீர்த்தேக்க சுற்றுவட்டார பகுதியில் 24 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் 16 மில்லிமீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணைப்பகுதியில் பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பொழிவும் என ஒட்டுமொத்தமாக 109.20 மில்லி மீட்டர் மழைப்பொழிவு கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணையான அடவிநயினார் கோவில் நீர்த்தேக்க அணையானது ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ள நிலையில், தற்போது 67.50 கன அடியாக நீர்மட்டம் உள்ளது.

அதேபோல், குண்டாறு அணையின் நீர்மட்டமானது 33.50 அடியாக உள்ள நிலையில், கருப்பாநதி அணையின் நீர்மட்டமானது 45.28 கன அடியாக உள்ளது.

மேலும், ராமநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 52 அடியை எட்டியுள்ள நிலையில், கடனாநதி அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 5 அடியை எட்டி 48.50 கன அடியாக உள்ளது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால் தென்காசி மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN