டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் சிராஜ் விடுவிப்பு -பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு...!
மும்பை, 10 ஜூன் (ஹி.ச.) அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் இந்திய
T


மும்பை, 10 ஜூன் (ஹி.ச.)

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், அவர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிராஜின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

சிராஜுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் முக்கிய தொடர்களை முன்னிட்டு வீரர்களின் உடற்தகுதி மற்றும் பணிச்சுமையை நிர்வகிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA