கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை
மதுரை, 10 ஜூன் (ஹி.ச) மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு இவரது மகன் அம்சகொடி ( வயது 36). அம்சகொடி இன்னும் திருமணம் ஆகவில்லை. கொத்தனார் வேலை செய்து வருகிறார். தற்போது திருப்பூரில
Murder


மதுரை, 10 ஜூன் (ஹி.ச)

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு இவரது மகன் அம்சகொடி

( வயது 36). அம்சகொடி இன்னும் திருமணம் ஆகவில்லை. கொத்தனார் வேலை செய்து வருகிறார். தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் இதே வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கார்த்திக் என்பவரிடம் ஜல்லிக்கட்டு காளை வாங்கித்தருவதாக கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.

ஆனால் கடந்த நான்கு வருடமாக பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூரில் வேலை செய்து வந்த அம்சகொடி நேற்று மதுரை வந்த தகவலை தொடர்ந்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று இரவு அம்சகொடியிடம் ஜல்லிக்கட்டுக்கு வாங்கிய பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் அம்சகொடி மீது நடைபெற்ற தாக்குதலில் அம்சகொடி சம்பவ இடத்தில் பலியானார்.

இதனை தொடர்ந்து பெருங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அம்சகொடியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் இடம் பெருங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN