அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் ஒரு கோடி பேர் இணைய வாய்ப்பு - மகா.சுசீந்திரன்
மதுரை, 10 ஜூன் (ஹி.ச.) தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாநில முன்னாள் தலைவர் மகா.சுசீந்திரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 2026-க்குள் We The Leaders அமைப்பில் 1 கோடி பேர் அமைப்பில் இணைய வாய்ப்புள்ளது. விரைவில் இவ்வ
Maha


மதுரை, 10 ஜூன் (ஹி.ச.)

தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாநில முன்னாள் தலைவர் மகா.சுசீந்திரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

2026-க்குள் We The Leaders அமைப்பில் 1 கோடி பேர் அமைப்பில் இணைய வாய்ப்புள்ளது. விரைவில் இவ்வமைப்பு அரசியல் இயக்கமாக மாற்றி தேர்தலை சந்திக்க உள்ளது.

தமிழக பாஜக எடப்பாடி பழனிசாமி பாஜகவாக மாறி விட்டது. இதன் காரணமாக நாங்கள் பாஜகவில் இருந்து வெளியேறினோம்

அன்னாமலை வளர்த்த பாஜகவை வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள். 2026 ல் தமிழக பாஜக எதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் மண்டியிட்டார்கள் என தெரியவில்லை.

நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியின் மறுபக்கமாக செயல்பட்டார். பாஜகவினர் அழைத்தால் நயினார் நாகேந்திரன் போனை எடுப்பதில்லை, இப்போது கூட நயினார் நாகேந்திரனுக்கு போன் அடியுங்கள்' போனை எடுத்தால் 1 இலட்சம் பரிசு தருகிறேன்.

வெற்றி பெற மாட்டோம் என தெரிந்தே பாஜக போட்டியிடும் இடங்களை பாஜக பெற்றது.

அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடவே தொகுதிகள் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN