நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, 10 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். புதுச்சேரியில் தேசிய ஜன
CM Rangasamy


புதுச்சேரி, 10 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் சபாநாயகர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாஜகவுடன் கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஏற்கனவே ஒருமுறை டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மீண்டும் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்று இருக்கிறார்.

டெல்லி சென்ற அவர் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN