Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தொடர்ச்சியான பதவிக்கால சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ள நிலையில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
எக்ஸ் தள பதிவில்,
சுதந்திர இந்திய வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பணியாற்றிய பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை நரேந்திர மோடி எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் என்ற தொடர்ச்சியான பதவிக்கால சாதனையை கடந்து, பிரதமர் மோடி 4,399-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மோடியின் தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு ஆகியவை புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அயராது உழைத்து வரும் பிரதமர் மோடி மேலும் பல ஆண்டுகள் மக்கள் பணியாற்றி தேசத்தை வழிநடத்த வேண்டும் என்றும், பாஜக தமிழ்நாடு சார்பில் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P