Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில்,
ஜூன் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தனது வாழ்க்கையில் முக்கியமான முடிவு தொடர்பான அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறினார்.
ஆனால், தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா மறைவால் திரையுலகம் முழுவதும் துயரத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அந்த இழப்பு தன் குடும்ப உறுப்பினரை இழந்தது போன்ற வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையிலும் தனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், ஜூன் 11-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த அந்த முக்கிய அறிவிப்பு, தற்போது ஜூன் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P