Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.
அதேபோல, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் (வியாழக்கிழமை) கனமழை தொடரும் எனக் கணித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள வானிலை மையம், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
அதே போல தமிழ்நாட்டில் 9 இடங்களில் வெயில் நேற்று சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P