Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 10 ஜூன் (ஹி.ச.)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் டலி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த குடோனில் 7 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. தொடர்ந்து ஏற்பட்ட பலத்த வெடிப்பால் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் அங்கு பணியாற்றி வந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சட்டவிரோதமாக பட்டாசு குடோன் செயல்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA