வீட்டில் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு - போலீசார் தீவிர விசாரணை
திருவண்ணாமலை, 10 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சுண்டக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் இருந்த கதவுகள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைக்கப்ப
Chengan Police Station


திருவண்ணாமலை, 10 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சுண்டக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

வீட்டில் இருந்த கதவுகள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்த ரமேஷ், உடனடியாக செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வீட்டின் உள்ளும், சுற்றுப்புற பகுதிகளிலும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் வகையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பவம் நடைபெற்ற நேரம், வீட்டில் யாரேனும் இருந்தார்களா, முன்கூட்டியே வீட்டை கண்காணித்து திட்டமிட்டு கொள்ளை நடத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN